இலங்கையில் பஞ்சமில்லா தங்கம் : விலையை பாரிய அளவு குறைக்க நடவடிக்கை!!

1535

தங்கம்..

தங்க பொருட்களின் விலை எதிர்வரும் நாட்களில் குறைய கூடும் என தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது. நாட்டில் தங்க இருப்புக்கு பஞ்சமில்லை என தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை இயக்குனர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஒரு வருடத்திற்கு 10 டன் தங்க நகை தேவைப்படுகின்றது. இதுவரையில் நாட்டினுள் தேவைப்படுவதற்கு அதிகப்படியாகவே தங்கம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எப்படிருப்பினும், இதுவரையிலும் 22 கரட் தங்கம் 90000 மற்றும் 92000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். தங்கத்தின் விலை குறைப்பை எதிர்பார்த்து பலர் காத்திருக்கின்றனர்.