வன்னிக்கான புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம்!

1137

லால் செனவிரத்தின..

வன்னி மாவட்டத்திற்கான பிரதி பொலிஸ்மா அதிபராக லால் செனவிரத்தின இன்றைய தினம்(23.09.2020) தனது கடைமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

பதவி ஏற்பு நிகழ்வு கண்டி வீதியில் அமைந்துள்ள பொலிஸ்மா அதிபரின் காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது புதிய பொலிஸ்மா அதிபருக்கு அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது.

வன்னி மாவட்டத்தின் பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிவந்த தம்மிக்க பிரியந்த களுத்துறை பகுதிக்கு மாற்றமாகி சென்ற நிலையில் புதிய பொலிஸ்மா அதிபராக கண்டியில் மோப்ப நாய்கள் பிரிவிற்கு பொறுப்பாகவிருந்து,

பின்னர் தகவல் தொடர்பாடல் ஊடக்கதுறைக்கு பொறுப்பாக இருந்த லால் செனவிரத்தின நியமிக்கப்பட்டுள்ளதுடன், இன்றைய தினம் உத்தியோக பூர்வமாக அவர் தனது கடமைகளை பொறுப்பேற்று கொண்டார்.

நிகழ்வில் பொலிஸ் அத்தியட்சகர் திஸ்சலால் சில்வா, உதவி பொலிஸ் அத்தியட்சகர் மல்வலகே, தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானவடு மற்றும் பொலிஸ் பொறுப்பதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.