முகமாலை பகுதியில் இரண்டாம் நாள் அகழ்வின் போது மண்டையோடுகள் மீட்பு!!

1008

முகமாலை பகுதியில்..

முகமாலையில் இரண்டாவது நாளாகவும் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணிகளின் போது இரண்டு மண்டையோடுகள் மீட்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி – முகமாலைப்பகுதியில் எலும்புக்கூடு அடையாளம் காணப்பட்ட பகுதியில் நேற்றையதினத்தில் இரண்டாவது நாளாகவும் நீதிமன்றத்தால் அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதே இவை மீட்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து முன்னெடுத்த இவ் அகழ்வுப்பணிகளின் போது விடுதலைப்புலி உறுப்பினர்களின் தகடு ஒன்றும், இரு மண்டையோடுகளும் பல்வரிசைகள்,

விடுதலைப்புலிகளின் வரி சீருடைகள், சீப்பு, பற்றி, இரு மகசின்கள் என்பன கண்டறியப்பட்டுள்ளன. குறித்த அகழ்வுப்பணிகள் நேற்றையதினத்துடன் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இப்பகுதியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடு விடுதலைப்புலிகளின் சோதியா படைப்பிரிவைச் சேர்ந்த முன்னாள் பெண் போ ராளி ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

-தமிழ்வின்-