தோணிக்கல் பகுதியில்..
வவுனியா தோணிக்கல் பகுதியில் வீதியில் அநாகரிகமான முறையில் ஈடுபட்டிருந்த ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தோணிக்கல் அகத்தியர் வீதியில் இன்று (25.09.2020) மாலை 6.00 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த அகத்தியர் வீதி சந்தியில் நின்று அப்பகுதியூடாக பயணிக்கும் மக்களிடம் அநாகரிகமான முறையில் இரு நபர்கள் ஈடுபட்டிருந்தமையுடன் வீதியூடாக பயணித்த முதியவர் ஒருவர் மீதும் தா க் கு த ல் மே ற்கொ ண்டுள் ளனர்.
இதனையடுத்து இவ்விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியமையினையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வி சாரணைகளை மேற்கொண்டனர்.
இதன் போது ஒருவரை பொலிஸார் கைது செய்ததுடன் மேலும் ஒருவர் த ப்பி யோடியு ள்ளார். இதன் போது பொதுமக்களிடம் அநாகரிகமாக செயற்பட்டனர் என்ற கு ற்றச்சா ட்டில் அப்பகுதியினை சேர்ந்த 38வயதுடைய நபரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.