வவுனியாவில் நடந்து சென்றவர் வாகனம் மோதி பலி!!

1321

கனகராயன்குளம் பகுதியில்..

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் நடந்து சென்ற நபர் ஒருவர் மீது வாகனம் மோதியதில் மரணமடைந்துள்ளார். நேற்றையதினம் (25.09) இரவு குறித்த நபர் ஏ9 வீதியால் சென்றுகொண்டிருந்த போது கொழும்பில் இருந்து யாழ்நோக்கி பயணித்த கப் ரக வாகனம் மோதியது.

அதில் படுகாயமடைந்த அவர் மீட்கப்பட்டு மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.எனினும் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்துள்ளார்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் கனகராயன்குளம் பொலிஸார் வி சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.