யாழ்ப்பாணத்தில் அதிசக்தி வாய்ந்த வெடி மருந்து மீட்பு!!

814

C4யாழ்ப்பாணம் பாசையூர் பிரதேசத்தில் உள்ள மீனவர் ஒருவரின் வீட்டில் இருந்து அதிசக்தி வாய்ந்த சீ.4 ரக வெடி மருந்து நேற்று கைப்பற்றபட்டுள்ளது. குறித்த வீட்டில் இருந்து 7 கிலோ கிராம் சீ.4 ரக வெடி மருந்து மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மீனவரின் வீட்டை சோதனையிட்ட போது 5.6 கிலோ கிராம் சீ.4 ரக வெடி மருந்து மீட்கப்பட்டதுடன் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்படட நபரிடம் நடத்திய விசாரணைகளை அடுத்து மேலும் 1.6 கிலோ கிராம் வெடி மருந்தும் மீட்கப்பட்டுள்ளது.

மீன்பிடிப்பதற்காக இந்த வெடி மருந்தை வீட்டில் களஞ்சியப்படுத்தி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட நபர் பொலிஸாரிடம் கூறியுள்ளார். சந்தேக நபரை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய பொலிஸார், வெடி மருந்தையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.