ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலை : உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு முறையீடு!!

865

high courtஇந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து விளக்கம் கேட்கும் மனுவை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில், தமிழக அரசு நேற்று முடிவு செய்து அந்த பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது.

இந்த நிலையில், மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முறையீட்டு மனுவையில், ராஜீவ் கொலை வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பு விசாரித்த நிலையில், அதனை தமிழக அரசு விடுவிக்க முடியுமா? என்று கேட்டுள்ளது.

மத்திய அரசின் கோரிக்கை இன்று பிற்பகல் 2.45 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் விவாதத்துக்கு வருகிறது.