வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவு வழியாக கொரோனா வைரஸ் பரவக்கூடும்?

605

உணவு வழியாக..

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவு வழியாக கொரோனா வைரஸ் பரவக்கூடும் என்ற அ ச்சம் அவசியமற்றது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொற்று நோயியல் பிரிவின் தலைமை தொற்று நோயியல் நிபுணர் வைத்திய கலாநிதி சுதத் சமரவீர இதனை நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் வழியாக வைரஸ் பரவும் அபாயம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ்’ஒருவரின் சுவாச மண்டலத்திற்குள் நுழையும் போது மட்டுமே அவருக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

அத்துடன் ஒருவர் வைரஸ் கொண்ட ஒரு மேற்பரப்பு அல்லது பொருளைத் தொட்ட பின்னர் அவர்களின் கண்கள், மூக்கு அல்லது வாயைத் தொடும்போதே வைரஸ் பரவுகிறது.

அதேநேரம்,பொருள் ஒன்றின் மேற்பரப்பில் அல்லது பொருளில் மூன்று நாட்கள் மட்டுமே வைரஸினால் தங்கியிருக்க முடியும். எனவே, உணவை உட்கொள்ளும்போது வைரஸ் சுவாச மண்டலத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்பு குறைவு என்று சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.