
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் இரத்து செய்ததோடு அவர்களை விடுதலை செய்யும் பொறுப்பை தமிழக அரசின் முடிவுக்கு விட்டது.
இதையடுத்து நேற்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தின்போது ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வந்த சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உள்பட 7 பேரை விடுதலை செய்யப்படுவதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டார்.
இது தமிழ் உணர்வாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் தமிழக அரசின் இந்த முடிவிற்கு கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யான நடிகை ரம்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அந்தக் கொலைச் சம்பவத்தில் ராஜிவ்காந்தி மட்டுமே கொல்லப்படவில்லை. மற்ற பொதுமக்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அப்படியிருக்க எப்படி விடுதலை செய்ய முடியும்? என்று தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை இன்று ராஜிவ் கொலை வழக்கு கைதிகள் 7 பேரையும் விடுவிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




