பெண்ணுக்கு திருமண ஆசைகாட்டி 15 இலட்சத்தை மோசடி செய்தவர் கைது!!

851

Arrestedருவன்வெல்ல பொலிஸ் பிரிவில் பெண்ணொருவரை திருமணம் செய்வதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த மாதம் 16ம் திகதி சுமார் 15 இலட்சத்தை இவ்வாறு மோசடி செய்துள்ளதாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் நேற்றையதினம் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் இன்று அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.