திருமணத்திற்கு சென்ற 3 சிறுமிகள் எரித்துக் கொலை!!

1008

Andhra-girls-burnt-aliveஆந்திராவில் திருமணத்திற்கு சென்ற மூன்று சிறுமிகள் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் நிஜாம்பாத்தில் நடந்த திருமணத்திற்கு அக்‌ஷயா(9), சுரி(6), குஷி(4) என்ற மூன்று சிறுமிகள் நேற்று வந்துள்ளனர்.
நேற்று மாலை நேரத்தில் சிறுமிகளின் மாமா நரேந்திர ரெட்டி, மூன்று பேரையும் அழைத்துக் கொண்டு காரில் சென்றுள்ளார்.

வெகுநேரம் ஆகியும் சிறுமிகள் திரும்பி வராததால், சந்தேகமடைந்த உறவினர்கள் போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது, 40 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பாசீர் என்ற இடத்தில் உள்ளதாகவும், தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் கூறியுள்ளார்.

இதனால் பதற்றமடைந்தவர்கள் பொலிசாருக்கு தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். திருமணமான இடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் மூன்று சிறுமிகளின் சடலங்கள் உடல் கருகிய நிலையில் இன்று மீட்கப்பட்டுள்ளது.

இதற்கு அருகே பெட்ரோல் போத்தல், கைக் கடிகாரம் மற்றும் செருப்பு கிடந்துள்ளது. இதனையடுத்து சிறுமிகள் ஏன் கொலை செய்யப்பட்டனர் என்பது குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நரேந்திர ரெட்டிக்கு திருமணம் ஆகவில்லை, எனவே பொறாமையின் காரணமாக இந்த குற்றத்தை செய்திருக்கலாமா என்று சில உறவினர்கள் சந்தேகிக்கின்றனர்.