இலங்கையில் மீண்டும் கொரோனா பரவல் : பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

1223

மீண்டும் கொரோனா பரவல்..

தேவையற்ற பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

கம்பஹா – திவுலபிட்டிய பிரதேசத்தில் வசித்து வந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று பரவிய விதம் பற்றி இன்னமும் கண்டறியப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, மக்கள் கூடுதலான அவதானத்துடன் செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென சுகாதாரத் துறையினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு நோய் குணமடைந்து வீடு திரும்பும் போது குறித்த பெண்ணிடம் நடத்திய பீ.சீ.ஆர் பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா நோய்த்தொற்று பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பெண்ணுக்கு சிகிச்சையளித்த சுகாதாரப் பணியாளர்கள் 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.குறித்த பெண்ணுக்கு நோய்த்தொற்று பரவிய விதம் குறித்து வி சாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த பெண்ணுக்கு கொரோனா நோய்த்தொற்று பரவியதனால் திவுலப்பிட்டி உள்ளிட்ட சில பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.