ஹொலிவுட் நிறுவனத்துடன் மோதும் பிரபுதேவா!!

835

Prabhudeva

பட தலைப்பு தொடர்பாக எழுந்துள்ள பிரச்னையில் ஹொலிவுட் நிறுவனத்துடன் மோதுகிறார் பிரபுதேவா.இந்தியில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார் பிரபுதேவா.

தற்போது இவர் பாபா பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில், அஜய் தேவ்கன்- சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் ஆக்ஷன் ஜாக்சன் என்ற படத்தை இயக்கி கொண்டிருக்கிறார்.

ஹொலிவுட்டில் இதே பெயரில் புதுப்படம் ஒன்றை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துக் கொண்டிருக்கிறது.பாலிவுட்டிலும் இந்த தலைப்பில் படம் தயாரிப்பதை அறிந்த நிறுவனம், பாபா பிலிம்சுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் இதுதொடர்பாக இந்தி சினிமா தயாரிப்பாளர் சங்கத்திலும் வார்னர் பிரதர்ஸ் புகார் அளித்துள்ளனர்.ஆனால் ஹொலிவுட் படத்துக்கும் தனது படத்துக்கும் சம்பந்தமில்லை என்றும், எந்த நிலையிலும் தலைப்பை மாற்ற முடியாது என்றும் பிரபுதேவா திட்டவட்டமாக கூறியுள்ளாராம்.

இதுகுறித்து பாபா பிலிம்ஸ் உரிமையாளர் தன்வானி, நாளை மறுநாள் தயாரிப்பாளர் சங்கத்தில் அவசர கூட்டம் நடைபெறுகிறது. அப்போது இந்த பிரச்னை பற்றி பேச உள்ளனர்.

அது ஹொலிவுட் படம், இது இந்திய படம், ஒரே தலைப்பை வைப்பதால் என்ன ஆகிவிடப்போகிறது, நாங்கள் தலைப்பை விட்டுத் தரமாட்டோம். திடீரென வார்னர் பிரதர்ஸ் எங்கள் படத்தின் ஸ்கிரிப்ட்டை கேட்கிறார்கள், அது எப்படி தந்துவிட முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.