வவுனியாவில் மரம் முறிந்து வீழ்ந்ததில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் காயம்!!!

1078

மரம் முறிந்து வீழ்ந்ததில்..

வவுனியா எ9 வீதியிலுள்ள பேயாடிகூழாங்குளம் இராணுவ முகாமிற்கு முன்பாக உள்ள மரம் ஒன்று இன்று (07.10) பிற்பகல் முறிந்து வீழ்ந்ததில் அவ்வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் காயமடைந்து நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் வவுனியா கண்டி வீதி பேயாடிகூழாங்குளம் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு முன்னாலுள்ள மரம் திடீரென்று முறிந்து வீழ்ந்துள்ளது.

இதன்போது அவ்வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் சம்பவ இடத்திற்கு முன்பாக உள்ள இராணுவ முகாமின் படையினர் முறிந்த மரத்தை போக்குவரத்திற்கு இடையூறு இன்றி அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.