மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் முதல் வெற்றியை ருசி பார்த்த அயர்லாந்து அணி!!

627

Iralandமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டுவென்டி-20 போட்டியில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி, 2 டுவென்டி–20, ஒரு ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டுவென்டி–20 போட்டி கிங்ஸ்டவுனில் நடந்தது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் அணித்தலைவர் டேரன் சமி, முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார். மேற்கிந்திய தீவுகள் அணி, 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 116 ஓட்டங்கள் எடுத்தது.

எட்டக் கூடிய இலக்கை துரத்திய அயர்லாந்து அணிக்கு அணித்தலைவர் போர்டர்பீல்டு(4), ஸ்டெர்லிங்(0) ஜோடி மோசமான துவக்கம் அளித்தது. முடிவில் அயர்லாந்து அணி 19.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 117 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சர்வதேச டுவென்டி–20 அரங்கில், அயர்லாந்து அணி வெற்றி பெறுவது இதுவே முதன் முறையாகும்.