வவுனியாவில் வாராந்த பத்திரிகை நிறுவனம் மீது கைக் குண்டுத் தாக்குதல்!!(படங்கள்)

510

வவுனியாவில் இருந்து வெளிவரும் வாராந்த பத்திரிகை நிறுவனமொன்றினை இலக்கு வைத்து நேற்று (21) 9.30 மணியளவில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெடிபொருளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

தேக்கவத்தை பகுதியில் அமைந்துள்ள இப்பத்திகை நிறுவத்தில் பணிகளை முடித்துக்கொண்டு அலுவலகத்தை மூடிய சில நிமிடங்களில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்தவர்களால் வீசப்பட்ட பொருளொன்றே வெடித்துள்ளதாக தெரியவருகின்றது.

எனினும் பத்திரினை நிறுவனத்தின் முன்னாள் இப் பொருள் வீழ்ந்து வெடித்துள்ளமையினால் நிறுவனத்திற்கு எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

111213