இலங்கையில் நான்கு பேரில் ஒருவர் மன நோயினால் பீடிப்பு!!

627

Mentalஇலங்கையில் நான்கு பேரில் ஒருவர் மன நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாக சட்ட உளவியல் மருத்துவர் ரீ.எஸ்.எஸ்.மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டில் 25 வீதமானவர்கள் ஏதேனும் ஓர் உளவியல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் உளவியல் சிகிச்சை வழங்கக் கூடிய தகைமையுடைய 60 மருத்துவர்களே கடமையாற்றுகின்றனர்.

நாளுக்கு நாள் இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் மற்றும் சமூக விரோத செயற்பாடுகளை தடுக்க முடியவில்லை. குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்த நாடு முழுவதிலும் 25 சட்ட வைத்திய அதிகாரிகளே கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்னர்.

இது எந்த வகையிலும் போதுமானதல்ல. இலங்கையில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.