பாடசாலை மாணவி வெள்ளை வானில் கடத்தல்!!

779

White Vanபாடசாலை மாணவியொருவர் வெள்ளை வானில் கடத்தப்பட்டுள்ளார். மதவாச்சி, மைத்திரிபால சேனாநாயக்க மஹா வித்தியாலய மாணவி ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.

பாடசாலையில் தரம் 9ல் கல்வி பயிலும் 14 வயது மாணவியே கடத்தப்பட்டுள்ளார்.

பாடசாலை முடிந்து முச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது வெள்ளை வானில் சென்றவர்கள், முச்சக்கர வண்டியை மறித்து மாணவியை கடத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மதவச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.