இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி திருமணத்துக்கு பிறகு நடிக்காமல் இருந்தார். தற்போது திஸ்க்யூன் என்ற படத்தை தயாரிக்கிறார். இதில் நாயகனாக ஹர்மன் பவேஜா நடிக்கிறார்.
இந்த படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடியுள்ளார். குத்தாட்டம் ஆடியதற்கான காரணத்தை வெளியிட்டு உள்ளார். அவர் கூறியதாவது..
என் மகன் வியானுக்கு இந்த பாடல் மிகவும் பிடித்து இருந்தது. வீட்டில் எப்போதும் இந்த பாட்டை போட்டாலும் அவன் நடனம் ஆட துவங்கி விடுவான். எனவேதான் இந்த பாட்டுக்கு குத்தாட்டம் ஆட சம்மதித்தேன் என்று அவர் கூறினார்.






