இலங்கையில் 35 கிலோ தங்கம் கடத்திச் சென்ற இருவரை இந்திய கடலோர காவல் குழும பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு இலங்கையில் தங்கம் கடத்திவரப்படுவதாக கடலோர காவல் குழும பொலிஸாருக்கு ரகசிய தகவல்கிடைத்தது.
இதனையடுத்து விரைந்து சென்ற பொலிஸார் பாம்பன் ரயில் நிலையத்தில் சாக்குமூட்டையுடன் இருந்த 2 பேரை பிடித்து விசாரித்ததில் தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது.
அவர்களிடம் சாக்கு மூட்டையில் இருந்த 35 கிலோ தங்கத்தை பொலிஸார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 11 கோடி என தெரிய பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கடத்தலில் ஈடுபட்ட ராமேஸ்வரம் புது ரோடு தமிழரசன் (45). காளிதாசன் (28) உள்ளிட்ட இருவரையும் கடலோர காவல் குழும பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





