சிறுவனை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞர்கள் கைது!!

601

Boy Abuseதிம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தில் சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகம் செய்த 22 வயதுடைய இரு இளைஞர்களை திம்புள்ள – பத்தனை பொலிஸார் நேற்று (23) காலை கைது செய்துள்ளனர்.

கடந்த 21ஆம் திகதி இந்த சிறுவனுடன் இளைஞர்கள் விளையாடி கொண்டிருந்த வேளையில் குறித்த இளைஞர்கள் சிறுவனை ஏமாற்றி மறைவான ஒரு இடத்திற்கு கொண்டு சென்று சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சிறுவன் அவ்விடத்திலேயே மயக்கநிலையில் இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வீடு திரும்பாத நிலையில் சிறுவனின் பெற்றோர்கள் சிறுவனை தேடும்போது தேயிலை தோட்டப் பகுதியில் சிறுவன் மயக்க நிலையில் இருந்துள்ளார்.

சிறுவனை பெற்றோர்கள் கொட்டகலை வைத்தியசாலைக்கு அனுமதித்த பின் மேலதிக பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சிறுவனுக்கு சுயநினைவு திரும்பிய போது தனக்கு நடந்த துஷ்பிரயோகத்தை பற்றி பெற்றோர்க்கு தெரிவித்ததையடுத்து பெற்றோர்கள் திம்புள்ள – பத்தனை பொலிஸில் முறைபாடு செய்துள்ளனர்.