தேவநம்பிய தீசன் மன்னனின் ஆட்சிக் காலத்திற்கு முன்னர் அமைக்கப்பட்டதாக கருதப்படும் ஹொரவபொத்தானை – குருகல்ஹின்ன பிரதேசத்தில் உள்ள மயானம் ஒன்றுக்கு அருகில் இருந்து சூரியன் இருக்கும் திசை நோக்கி செம்பு போன்ற மர்மான பொருள் பறந்து சென்றுள்ளது.
மயானத்தில் இருந்து சுமார் 200 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள பஹல குடாப்பிட்டிய என்ற இடத்தில் தங்க நிறத்திலான செம்பு போன்ற ஒரு பொருள் காணப்பட்டுள்ளது.
அது சூரியன் இருக்கும் திசை நோக்கி பறந்து சென்றதை அந்த பிரதேசத்தை சேர்ந்த 14 வயதான பாடசாலை மாணவன் செல்போன் கமராவில் படம் பிடித்துள்ளார். இது குறித்து கிருஷாந்த ஷாமல் பிரேமதிலக்க என்ற அந்த மாணவர் கூறுகையில்..
நானும், அம்மாவும் அம்மம்மாவும் மாட்டு பட்டிக்கு சென்றோம். மாடுகள் பயந்து ஓடும் என்பதால் அம்மா என்னை திரும்பி போகுமாறு கூறினார்.
நான் வீதியில் நடந்து வரும் போது மின்னும் பொருள் ஒன்றை கண்டேன். அருகில் சென்று பார்க்கும் போது அது செம்பு வடிவத்தில் இருந்தது.
கையில் எடுக்க முயன்ற போது அது ஆடி ஆடி வானத்தை நோக்கி பறந்தது. அப்போது என் கையில் இருந்த எனது அப்பாவின் செல்போன் மூலம் அந்த பொருளை படம்பிடித்தேன்.
இதன் பின்னர் நான் இது பற்றி கிராம சேவகருக்கும், பிரதேச செயலாளர் அலுவலகத்தின் சுற்றாடல் அதிகாரிக்கும் தெரியப்படுத்தினேன். அவர்கள் வந்து பார்த்து விட்டுச் சென்றனர் என்று கூறினார்.






