விபத்து..

வவுனியா ஹொரவப்பொத்தான வீதியில் பக்கோ கனகரக வாகனமும் வான் ஒன்றும் இன்று (02.11.2020) மோதி விபத்துக்குள்ளானது.

திருகோணமலையில் இருந்து ஹொரவப்பொத்தான வீதிவழியாக யாழ்ப்பாணம் நோக்கி நோயாளி ஒருவரை ஏற்றிவந்த கயஸ் ரக வான்மீது கோவில்குளம் உமாமகேசுவரன் வீதியால் வந்த பக்கோ கனகரக வாகனம் உமாமகேசுவரன் சந்தியில் வானுடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் கயஸ்ரக வான் கடும் சேதத்திற்குள்ளானதுடன் ஒருவர் சிறு காயத்திற்குள்ளானார். விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.






