கனடாவில் செல்போன் பேசிக்கொண்டிருந்த இந்திய மாணவனுக்கு ந டந்த வி பரீதம்!!

1190

பன்யம் அகில்..

கனடாவில் தங்கி படித்து வந்த இந்திய மாணவன் கட்டடத்தில் இருந்து கீழே வி ழுந்து உ யிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் பன்யம் அகில் (19). இவர் கனடாவின் ரொரன்ரோவில் தங்கி ஹொட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 8ஆம் திகதி அகில் தனது செல்போனில் வீட்டின் பால்கனியில் நடந்து கொண்டே பேசிக் கொண்டிருந்த போது நிலைதடுமாறி அவர் கீழே வி ழுந்து ப லியாகியுள்ளார். இது குறித்து கனடாவில் உள்ள அவரது நண்பர்தான், ஹைதராபாத்தில் உள்ள குடும்பத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அகில் கடந்த மார்ச் மாதம் ஹைதராபாத்துக்கு விடுமுறையில் வந்திருக்கிறார். இதையடுத்து சமீபத்தில் தான் மீண்டும் கனடாவுக்கு திரும்பியிருக்கிறார் என தெரியவந்துள்ளது.