இலங்கை நீதவான் நீதிமன்றத்தின் வரலாற்றில் முதல் முறையாக ஸ்கைப் தொழிற்நுட்பம் மூலமாக இத்தாலியில் இருந்து சாட்சியாளர் ஒருவரிடம் சாட்சியத்தை பெற கோட்டை நீதவான் திலின கமகே தீர்மானித்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணனி பயிற்சி நிறுவனத்தின் சுயாதீன கண்காணிப்பாளர் ஒருவரின் வழிகாட்டலில் எதிர்வரும் மார்ச் 14ம் திகதி ஸ்கைப் மூலம் சாட்சியத்தை பெற தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் நீதவான் ஆலோசனை வழங்கியுள்ளார்.
பிரான்சிஸ்கா தியதா என்ற இத்தாலிய பெண் 2011 ஆம் ஆண்டு இலங்கையில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது தன்னிடம் இருந்த 700 அமெரிக்க டொலர்கள் கொள்ளையிடப்பட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனடிப்படையில் பொலிஸார் தாக்கல் செய்த வழக்கிலேயே இந்த ஸ்கைப் தொழிற்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. ஹோட்டல் ஊழியரான தனஞ்ஜய பிரபாத் என்ற நபருக்கு எதிராகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஹோட்டலில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமராக்களில் பெறப்பட்ட காட்சிகளை பொலிஸார் சந்தேக நபருக்கு எதிரான சாட்சியமாக முன்வைத்துள்ளனர்.





