தமிழில் தயாரான நூற்றுக்கணக்கான சிறு பட்ஜெட் படங்கள் ரிலீசாகாமல் முடங்கி கிடக்கின்றன. இந்த படங்களை வாங்கி வெளியிட வினியோகஸ்தர்கள் முற்படுவதில்லை. தியேட்டர்களும் கிடைப்பது இல்லை. இதனால் தயாரிப்பாளர்கள் பலர் முதலீடு செய்த பணத்தை எடுக்க முடியாமல் தவிக்கிறார்கள்.
பெரிய பட்ஜெட் படங்கள் தற்போது ரிலீசாகாததால் நாளை மறுநாள் (28ந் திகதி) வல்லினம், தெகிடி, அங்குசம், காதல் சொல்ல ஆசை, அமரா ஆகிய தமிழ்படங்களும், வெற்றிமாறன் என்ற மலையாள படமும், நான் ஸ்டாப், பறக்கும் கல்லறை மனிதன், ஆக்ஷன் கிட்ஸ் ஆகிய ஆங்கில படங்களும், கரன்சி ராஜா என்ற தெலுங்கு படமும் ரிலீசாகின்றன.
இவற்றில் வல்லினம், தெகிடி படங்கள் மட்டும் மீடியம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு உள்ளன. வல்லினம் படத்தில் நகுல் நாயகனாக நடித்துள்ளார். மலையாளம், ஆங்கில படங்கள் தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது. வல்லினம் 400க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. மற்ற தியேட்டர்களில் மீதியுள்ள படங்கள் வெளியாகிறது.





