எதிர்வரும் 24 முதல் 48 மணித்தியாலங்களில் வங்காளவிரிகுடாவில் தாழமுக்க பிரதேசம் உருவாகும் சாத்தியம்!!

864

தாழமுக்கம்..

வங்காளவிரிகுடாவில் எதிர்வரும் 24 முதல் 48 மணித்தியாலங்களில் தாழமுக்க பிரதேசம் உருவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனால் வடக்கு, கிழக்கு கடற்பிரந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் திருகோணமலை முதல் மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடலோரப் பகுதிகளில் கடும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரை நீடிக்கும் கடற்பிரதேசம் கொந்தளிப்பாக காணப்படும். மேலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது காற்றின் வேகம் மணிக்கு 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் என்பதால் மீனவர்கள் மற்றும் கடலோடிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.