வவுனியாவில் விபத்திற்கு இலக்கானவரை காப்பாற்ற சென்றவர்களுக்கு நேர்ந்த கதி!!

2330

பனிக்கநீராவியில்..

வவுனியா – பனிக்கநீராவியில் இடம்பெற்ற தொடர் விபத்தில் நால்வர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.

வவுனியாவில் இருந்து மரக்கறியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரே மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் மூவர் அவருக்கு உதவி செய்வதற்காக சென்ற போது வேகமாக வந்த மகேந்திரா ரக வாகனமொன்று குறித்த நால்வர் மீதும் மோதியுள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த நால்வரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணை ஓமந்தை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.