ஜிமெயில் அறிமுகப்படுத்தும் புதிய வசதி!!

518

Gmailதனது பயனர்களுக்கு ஏற்றவாறு பல்வேறு வசதிகளை வழங்கிவரும் கூகுள் நிறுவனம் தற்போது தனது மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலில் புத்தம் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்கின்றது.

அதாவது ஒன்லைன் சொப்பிங், செய்தி சேவை போன்றவற்றிற்கு தமது மின்னஞ்சல் முகவரிகளை பயன்படுத்தி சந்தாதாரர் (Subscribe) ஆகியிருப்பவர்களுக்கு தொடர்ச்சியாக மின்னஞ்சல் வந்துகொண்டே இருக்கும்.

இதில் சில மின்னஞ்சல்களை தவிர்க்க வேண்டியிருந்தால் அது இதுவரை காலமும் கடினமானதாகவே இருந்தது.

ஆனால் தற்போது ஒரே ஒரு கிளிக் மூலம் Unsubscribe செய்து குறித்த மின்னஞ்சல் முகரிகளிலிருந்து வரும் மின்னஞ்சல்களை தவிர்க்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.