இணையத்தில் கசிந்த காஜலின் ரகசியம்!!

485

Kajal

காஜல் அகர்வால் மும்பை தொழில் அதிபர் ஒருவருடன் ஜோடியாக துபாயில் சுற்றிய படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன.

தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்து வரும் காஜல் அகர்வால் காதல் வலையில் விழுந்துவிட்டார் என்ற தகவல் வெளியானது.
தற்போது அதனை உறுதிப்படுத்தும் வகையில் மும்பை இளைஞர் ஒருவருடன் காஜல் அகர்வால் நெருக்கமாக இருக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

அந்த இளைஞர் மும்பையில் பிரபலமாக உள்ள இன்டீரியர் நிறுவனம் ஒன்றில் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றுகிறாராம்.

இருவரும் ஒருவாரத்துக்கு முன் துபாய் சென்றபோது, அங்கு பல்வேறு இடங்களில் ஜோடியாக சுற்றியுள்ளார்கள். தங்கள் ரகசிய காதல் தெரிந்து விடக் கூடாது என்பதற்காவே இந்த வெளிநாடு ட்ரிப்பாம்.

ஆனால் இந்தப்படங்கள் எப்படியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளன. இந்தப் படங்கள் வெளியான பிறகு காஜல் அதுகுறித்து எதுவும் பேசாமல் அமைதி காத்துவருகிறார்.