அந்தமான் தீவுகளுக்கு அருகில் 65 இலங்கையர்களுடன் படகு கரையொதுங்கிய படகு!!

718

Boatநடுக்கடலில் கைவிடப்பட்ட 65 இலங்கையர்களை கொண்ட படகு ஒன்றில் கடலில் மிதந்தவாறு அந்தமான் தீவுகளுக்கு அருகில் கரையொதுங்கியுள்ளதாக தெரியவருகிறது.

வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக படகு மூலமாக ஆட்களை அழைத்துச் செல்லும் நபர்களினால் இவர்கள் நடுக்கடலில் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆட்கடத்தல் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள நபர்கள் இந்த இலங்கை பிரஜைகளிடம் இருந்து ஒரு லட்சம் ரூபா முதல் மூன்று லட்சம் ரூபா வரை அறவிட்டுள்ளனர்.

மட்டக்களப்பு பிரதேசத்தில் இருந்து சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் இவர்கள் படகில் ஏறியுள்ளதாக தெரியவருகிறது.