இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு 2014ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் 7 வீத கொடுப்பனவு உயர்வை வழங்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபையின் நேற்றைய கூட்டத்தின்போது 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளுக்கு 17 வீரர்கள் வருடாந்த ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஒப்பந்த வீரர்கள் 17 பேரும் நான்கு குழுக்களாகவும் விசேட குழு ஒன்றும் பிரிக்கப்பட்டுள்ளது.
குழு 1
குமார் சங்கக்கார
மஹேல ஜெயவர்தன
நுவான் குலசேகர
அஞ்சலோ மத்தியூஸ்
ரங்கன ஹேரத்
தினேஷ் சந்திமால் (2ஆம் குழுவிலிருந்து முதலாம் குழுவுக்கு இணைக்கப்பட்டுள்ளார்)
குழு 2
லகிரு திரிமன்னே ( 3ஆம் குழுவிலிருந்து 2ஆம் குழுவுக்கு இணைக்கப்பட்டுள்ளார்)
அஜந்த மென்டீஸ்
குழு 3
குசல் ஜனித் பெரேரா (4ஆம் குழுவிலிருந்து 3ஆம் குழுவில் இணைக்கப்பட்டுள்ளார்)
திசர பெரேரா
குழு 4
ஷமிந்த எரங்க
சுசித்திர சேனாநாயக்க
கௌஷால் சில்வா
சுரங்க லக்மால்
விசேட குழு
திலகரட்ண தில்ஷான்
லசித் மலிங்க
பிரசன்ன ஜெயவர்தன
கடந்த வருடம் டிசம்பர் 31ஆம் திகதி வரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் வீரர்களது பங்களிப்புக்கு அமைய இந்த நான்கு குழுக்களில் இணைக்கப்பட்டுள்ளனர்.
எனினும் 2013ஆம் ஆண்டில் 23 வீரர்களுக்கு வருடாந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டபோதும் இந்த ஆண்டு 17 வீரர்கள் மட்டுமே இந்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.





