விசேட பிரார்த்தனை..
புயல் தாக்கத்திற்கு மக்கள் முகம் கொடுத்துள்ள நிலையில் மக்களுக்கு நலன் வேண்டி விசேட பிரார்த்தனை வவுனியா கந்தசாமி ஆலயத்தில் இன்று(03.12.2020) காலை இடம்பெற்றது.
வவுனியா கந்தசாமி ஆலய அறங்காவலர் சபையின் ஏற்பாட்டில் ஆலயத்தின் பிரதம குரு உமாசுதன் குருக்கள் தலைமையில் இவ் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
புயல் தாக்கத்தில் இருந்து மக்களைக் காத்து மக்களுக்கு நலன் வேண்டி விசேட தீபாராதனைகளும் இதன்போது இடம்பெற்றன.
இவ் விசேட பூஜை வழிபாட்டில் மாவட்ட அரச அதிபர் சமன்பந்துல சேன, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார், கந்தசாமி ஆலய அறங்காவலர் சபையினர், தமிழ் விருட்சம் அமைப்பினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.