விமான நிலையம் எப்போது திறக்கப்படும் : அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

1122

விமான நிலையம்…

சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையத்தை மீண்டும் திறப்பது குறித்து ஜனவரி முதலாம் திகதிக்குள் முடிவு செய்யப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நாடாளுமன்றத்தில் நேற்று இது குறித்து அறிவித்துள்ளார். பயணிகளுக்காக விமான நிலையம் எப்போது திறக்கப்படும் என்பதை அனைவரும் அறிய விரும்புகிறார்கள்.

ஜனவரி முதலாம் திகதிக்குள் ஆலோசனை தருமாறு சுகாதார அதிகாரிகளிடம் கோரியுள்ளதாகவும் அவர் கூறினார். சுகாதார அதிகாரிகள் அனுமதி கொடுத்தவுடன் சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையத்தை மீண்டும் திறக்க அரசு தயாராக உள்ளது என்று அமைச்சர் ரணதுங்க கூறினார்.

பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்த விரும்பாததால் சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையத்தை திறக்க அரசு தாமதப்படுத்துகிறது என்றார் அமைச்சர்.

“மக்கள் என்ன சொன்னாலும் நாங்கள் இப்போது கொரோனா வைரஸுடன் வாழ வேண்டும். எனவே சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விமான நிலையத்தை மீண்டும் திறக்க முடியும் என நம்புகின்றோம்.

இதேவேளை, வெளிநாடுகளில் சிக்கித் தவித்த சுமார் 50,000 இலங்கையர்களை அரசாங்கம் நாட்டிற்கு அழைத்து வந்துள்ளது என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார்.

இந்நிலையில், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் மேலும் 40,000 இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

-தமிழ்வின்-