நடிகை பூமிகாவுக்கு ஆண் குழந்தை!!

820

Boomikaநடிகை பூமிகா தமிழில் பத்ரி, சில்லுன்னு ஒரு காதல், ரோஜா கூட்டம் படங்களில் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு மொழிகளிலும் நிறைய படங்களில் நடித்துள்ளார்.

பூமிகாவுக்கும் யோகா பயிற்சியாளர் பரத் தாகூருக்கும் அக்டோபர் 2007ல் திருமணம் நடந்தது. பல வருடங்களுக்கு பிறகு இப்போது பூமிகாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை பூமிகாவும் உறுதி செய்தார்.

இதுகுறித்து பூமிகா கூறும்போது, எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். பரத் தாகூரும் சந்தோஷமாக உள்ளார். ஆனந்தபெருக்கால் விழிகளில் கண்ணீர் வந்தது என்றார்.

குழந்தைக்கு பெயர் சூட்டும் நிகழ்ச்சி விரைவில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்கும்படி நடிகர், நடிகைக்கு அழைப்பு விடுக்க முடிவு செய்துள்ளார்.