விபத்து…
மொரட்டுவை-ஏகொட உயன பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த கர்ப்பிணி தாய்க்கு கருச்சிதைவு ஏற்பட்டிருக்கின்றது என காவல்துறையின் ஊடக பேச்சாளர் அஜித் ரோகன தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் வீதியை கடக்க முற்பட்ட வேளை கர்ப்பிணித்தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் மீது எதிரில் வேகமாக வந்த உந்துருளி மோதியது. இதன்போது சம்பவ இடத்திலேயே 7 அகவைக்கொண்ட சிறுமி மற்றும் ஒரு அகவைக்கொண்ட சிசு ஆகியோர் கொ ல்லப்பட்டனர்.
இதனையடுத்து காயங்களுடன் குறித்த கர்ப்பிணித்தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் இவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 20 அவைக்கொண்ட இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த இளைஞருக்கு எதிர்வரும் 18 ஆம் திகதி வரையில் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிப்பதாக காவல்துறையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.