இலங்கையில் உரிமை கோரப்படாத நிலையில் 12 கொரோனா சடலங்கள்!!

777

சடலங்கள்..

கொரோனாவினால் காவு கொள்ளப்பட்ட 12 பேரின் உடலங்கள் இன்னும் உறவினர்களால் உரிமை கோரப்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த 12 உடலங்களில் பெரும்பாலானவை முஸ்லிம் மக்களுடையது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபத்தின்படி இந்த உடலங்கள் தகனம் செய்யப்படவிருப்பதால் அந்த உடலங்களை பொறுப்பேற்க முஸ்லிம் தரப்பினர் மறுப்பு தெரிவித்து வருவதாக சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக தொடர்ந்தும் கொழும்பு சவச் சாலையில் இந்த உடலங்கள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தநிலையில் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு கொரோனாவால்,

பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியாது என்றும் தகனம் செய்வதே சிறந்தது என்ற பரிந்துரையை மீண்டும் வலியுறுத்தி இருக்கிறது.

அத்துடன் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இந்த விடயத்தில் மேற்கொள்ளப்படும் மீள் ஆய்வின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அந்த குழு அறிவித்திருக்கிறது.

அதேநேரம் கொரோனா வைரசால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடலங்களை தகனம் செய்வதற்கு எதிராக உயர்நீதி மன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு அண்மையில் நிராகரிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.