விபத்து…
வவுனியா வைத்தியசாலை சுற்று வட்டத்தில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த சுற்று வட்டத்தை கடக்க முற்பட்ட கார், எதிர்த் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் சிறு காயங்களிற்குள்ளாகினார். சம்பவ இடத்திற்குச் சென்ற வவுனியா போக்குவரத்து பொலிசார் விபத்து தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக வவுனியாவில் வாகன விபத்துக்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.