நிபந்தனைகளுடன் மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்ய அனுமதி : அரசாங்கத்தின் அறிவிப்பு!!

1531

மோட்டார் சைக்கிள்…

இலங்கைக்கு நிபந்தனைகள் சகிதம் மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருக்கிறது. போக்குவரத்து துறை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்திருக்கிறார்.

மோட்டார் சைக்கிள்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மோட்டார் சைக்கிள்களை பொருத்துவதற்கான தொழிற்சாலைகளை இலங்கையில் அமைப்பதற்கான இணக்கத்தை வெளியிட்டால் மாத்திரமே அந்த நிறுவனங்களின் மோட்டார் சைக்கிள்களை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என திலும் அமுனுகம தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனங்களுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் உடன்படிக்கைகள் செய்துக்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனங்கள் இலங்கை அரசாங்கத்துடன் இந்த உடன்படிக்கை செய்துக்கொண்ட பின்னரே அந்த நிறுவனங்களின் மோட்டார் சைக்கிள்களை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்திருக்கிறார்.