வவுனியாவில்..
சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்றைய நாளில் வலிந்து கா ணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தினரினால் வவுனியாவில் கவனயீர்ப்பு போ ராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த கவனயீர்ப்பு போ ராட்டம் இன்று (12.10.2020) காலை 10.30 மணியளவில் வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
போ ராட்டத்தில் ஈடுபட்டிருந்த கா ணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வேண்டும் வேண்டும் எமக்கான உரிமை வேண்டும், தண்டிக்க வேண்டும் தண்டிக்க வேண்டும் மனித உரிமை மீறலை தண்டிக்க வேண்டும்,
ஏற்று ஏற்று சர்வதேசமே கு ற்றவாளிகளை கூண்டில் ஏற்று, வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும், எமது உறவுகளுக்கு நடந்த அநீதிக்கு நீதி கிடைக்கும் வரை போ ராடுவோம் போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறும்,
மறுக்காதே மறுக்காதே எங்கள் உரிமைகளை மறுக்காதே , இராணுவத்தின் கெடுபிடிகளை உடன் நிறுத்து, எங்கே எங்கே கையில் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே போன்ற வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறும் போ ராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
கோவிட் -19 காரணமாக சமூக இடைவெளி , முகக்கவசங்களை அணிந்தவாறு போ ராட்டத்தில் 30க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.