குருணாகல் மாவட்டத்தில் குளியாபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்று வருகின்ற தேசத்தின் மகுடம் கண்காட்சியில் சிறப்பு அரங்காற்றுகையாக முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க போராளிகளின் நடனம் அமைந்தது.
இம்முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு பெற்று, சிவில் பாதுகாப்பு படையில் கடமை ஆற்றுகின்றார்கள்.
ஜனாதிபதியின் சமூக அபிவிருத்திப் பிரிவும், சிவில் பாதுகாப்பு பிரிவும் இணைந்து தேசத்தின் மகுடம் கண்காட்சியில் இவர்களின் அரங்காற்றுகைகளுக்கு களம் அமைத்துக் கொடுத்து உள்ளனர்.






