யாழ். நோக்கி பயணித்த டிப்பரும், மோட்டார்சைக்கிளும் மோதி விபத்து : ஒருவர் பலி!!

1621

விபத்து..

கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புதுக்காட்டுச்சந்தி பகுதியில் டிப்பர் வாகனமும், மோட்டார்சைக்கிளும் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன. இன்று காலை இடம்பெற்றுள்ள குறித்த விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் பளை பிரதேசத்தின் புலோப்பளை மேற்கை சேர்ந்த 56 வயதான கிருஸ்ணன் நவநீதன் என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

கிளிநொச்சி நோக்கி பயணித்து கொண்டிருந்த மோட்டார்சைக்கிள் மீது யாழ். நோக்கி பயணித்த டிப்பர் புதுகாட்டுச்சந்தியில் திரும்பிய வேளை குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

பலத்த காயங்களுக்கு இலக்காகி சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.