மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து உயிரிழந்த நபர் : கொரோனா தொற்று உறுதி!!

1358

கொரோனா..

பாணந்துறை – மஹவில பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

68 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அவரது சடலத்திற்கு மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையின் இந்த விடயம் உறுதியாகியுள்ளது.

அதற்கமைய சடலத்தை தகனம் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.