50 அடி பள்ளத்தில் விழுந்த லொறி!!

780

வீதியை விட்டு விலகி..

ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் தியசிரிகம பகுதியில் லொறியொன்று 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்திற்கு இலக்காகியுள்ளது.

கொட்டகலையிலிருந்து மஸ்கெலியா சென்ற லொறியே இன்று காலை வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்திற்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மஸ்கெலியா வர்த்தக நிலையங்களுக்குப் பொருட்கள் ஏற்றி செல்கையில் சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கத்தினால் லொறி கட்டுப்பாட்டை மீறி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

விபத்தில் சாரதி தெய்வாதீனமாகக் காயங்களின்றி உயிர் தப்பியுள்ளார். என்ற போதும் லொறியும் அதிலிருந்த பொருட்கள் கடும் சேதமாயுள்ளதாக கூறப்படுகிறது.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.