பொதுஜன பெரமுன கட்சியின்..
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் இளைஞர் மற்றும் மகளிர் மாநாடு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (13.12.2020) நடைபெற்றது.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை உபதவிசாளர் வசந்த தலைமையில் இம் மாநாடு நடைபெற்றது.
இம் மாநாட்டில் கட்சியின் முன்னேற்றத்திற்காக மாவட்ட மட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
இதில் மன்னார், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவாட்ட பாராளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான், அமைச்சர் நாமல் ராஜபக்ஸவின் வன்னிக்கான இணைப்பாளர் பாலித்த,
முன்னாள் பிரதி அமைச்சர் சுமதிபால, பொதுஜன பெரமுன கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் மாவட்ட முக்கியஸ்தர்கள், மதத் தலைவர்கள், கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் இதன்போது கலந்து கொண்டனர்.