வாகன இலக்க தகட்டில்..
வாகன இலக்கத்தகடு விநியோகிக்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில், மாகாண அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள எழுத்துக்களை நீக்க அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே இந்த அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். வாகனங்களை பதிவு செய்யும் போது, வாகனங்களை அடையாளப்படுத்தும் வகையிலான இலக்கமொன்று வெளியிடப்படுகின்றமையினால்,
திணைக்களத்தின் தரவுகள் கட்டமைப்பின் ஊடாக வாகனங்களை அடையாளம் கண்டுக்கொள்ள முடியும் என அமைச்சரவை பத்திரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புதிய நடைமுறையின் கீழ், மாகாணங்களுக்கு இடையில் வாகனங்களை விற்பனை செய்யும் போது, இலக்கத்தகடுகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான தேவை இனி கிடையாது என கூறப்படுகின்றது.