செட்டிகுளம் பகுதியில்..
வவுனியா, செட்டிகுளம், பயரிக்குளம் பகுதியில் வீடு ஒன்று இன்று(15.12.2020) அதிகாலை தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. வவுனியா, செட்டிகுளம், பயரிக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீவிபத்து காரணமாக வீடு தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
வீட்டில் இருந்த தந்தை, தாய் மற்றும் ஒரு வயது குழந்தை ஆகியோர் அயலவர்களின் உதவியுடன் காப்பாற்றப்பட்ட போதும் வீட்டில் இருந்த உடமைகள் முழுமையாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
தீ விபத்துக்குரிய காரணம் தொடர்பில் செட்டிகுளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.