விபத்து..
மட்டக்களப்பில் கல்முனை பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தாழங்குடா பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார்சைக்கிளும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் செங்கலடி பகுதியைச் சேர்ந்த தர்சன் (26 வயது) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். அத்துடன் கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.