கொழும்பு உச்சநீதிமன்ற கட்டட வளாகத்தில் பாரிய தீ விபத்து!!

1067

தீ விபத்து..

கொழும்பு உச்சநீதிமன்ற கட்டட வளாகத்தில் சற்று முன்னர் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு படையின் 9 வண்டிகள் நீதிமன்ற கட்டட வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மின் ஒழுக்கு காரணமாக தீ பரவியிருக்கக் கூடும் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

பொலிஸாரும் தீயணைப்பு படையினரும் இணைந்து தீயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.