மக்களின் நடவடிக்கைக்கு அமையவே நாட்டை முடக்குவது தொடர்பில் தீர்மானம் : இராணுவத் தளபதி!!

1312

நாட்டை முடக்குவது தொடர்பில்..

எதிர்வரும் பண்டிகை காலத்தில் மக்கள் அதிகளவில் வீதிகளில் இறங்கிச் செயற்பட்டால் நாட்டை முடக்க நேரிடும் என கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கை மத்திய நிலையத்தின் பிரதானியான இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் இந்த மாதத்திலும் இருக்கக்கூடும். அடுத்த மாதமளவில் அதனை பெரும்பாலும் கட்டுப்படுத்த முடியும்.
கொரோனா பரவிய ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கை நல்ல நிலைமையில் இருக்கின்றது.

சுகாதாரத் துறையினர் மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் அர்ப்பணிப்பு காரணமாகவே கொரோனாவை இந்தளவுக்குக் கட்டுப்படுத்த முடிந்துள்ளது. எவ்வாறாயினும் முழு நாட்டை முடக்க எதிர்பார்க்கவில்லை. அத்துடன் நாட்டிற்குள் பெரியளவில் வைபவங்களை நடத்தவும் முடியாது எனவும் இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-